மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

காலிறுதிக்குள் நுழைந்த முதல் வீரர்!

காலிறுதிக்குள் நுழைந்த முதல் வீரர்!

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் நான்காவது சுற்று ஆட்டத்தில் நவாக் ஜோகோவிச் மற்றும் டோமினிக் தியம் இருவரும் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இந்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி முதல் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று (ஜனவரி 23) முதல் காலிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

முன்னணி வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர், மரின் சிலிச் ஆகியோர் காலிறுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், மற்ற முன்னணி வீரர்களான நவாக் ஜோகோவிச், டோமினிக் தியம் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். நேற்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் ஜோகோவிச், கொரிய வீரர் சூங் ஹையோன் உடன் மோதினார். நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த ஜோகோவிச் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வந்தபோதும் போட்டியின் இடையே அவர் காயத்தினால் சிரமப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியிலும் அவர் காயத்தினால் அவதிப்பட்டு வந்த நிலையில் சரியே விளையாட முடியாமல் தோல்வியைத் தழுவினர். எனவே, சூங் ஹையோன் 7-6, 7-5, 7-6 என்ற நேர் செட்களில் போராடி வந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதி வாய்ப்பைப் பெற்ற முதல் கொரிய வீரர் சூங் ஹையோன் ஆவார்.

நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள தியம் 97ஆவது இடத்தில் உள்ள டேன்னிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இந்தப் போட்டியில் இருவரும் மாறி மாறி செட்களை கைப்பற்றினர். முதல் மற்றும் மூன்றாம் செட்களை சாண்ட்கிரென்வும் இரண்டாவது மற்றும் நான்காவது செட்களை தியமும் கைப்பற்றினர். இந்த நான்கு செட்களும் நீண்ட நேரம் நடைபெற்றது. இருவரும் சமபலத்துடன் விளையாடியதால் ரசிகர் நேரம் செல்வதையும் மறந்து இந்தப் போட்டியை ரசித்தனர். இருப்பினும் ஐந்தாவது செட்டை 6-3 என எளிமையாக சாண்ட்கிரென் கைப்பற்றி காலிறுதிக்குள் நுழைந்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 23 ஜன 2018