மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 ஜன 2018

மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி: தமிழக அரசு பதில்!

மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி: தமிழக அரசு பதில்!

தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே உள்ளதாகவும், அப்பதவியிலிருந்த எட்வின் ஜோ பதவியிறக்கம் செய்யப்பட்டதாகவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் டீனாகப் பணிபுரிந்த எட்வின் ஜோ, கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து கரூர் அரசு மருத்துவமனை டீன் ரேவதி கயிலை ராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கின் மனுவை விசாரித்தபோது, எட்வின் ஜோ நியமனத்தை ரத்து செய்தும், ரேவதி கயிலை ராஜனை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல்குத்தூஸ் அமர்வும், எட்வின் ஜோ நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் தொடர்வதாகக் கூறி ரேவதி கயிலை ராஜன் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

செவ்வாய் 23 ஜன 2018