அரசு மருத்துவமனையில் எச்ஐவி பாதிப்பு எனத் தவறான சான்று!


ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, எச்ஐவி பாதிப்பு இருப்பதாகத் தவறாகச் சான்றளிக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மன வளர்ச்சி குன்றியவர். சுரேஷ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால், மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) சேர்க்கப்பட்டார். பிறகு சுரேஷ்குமாருக்கு ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்தப் பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாகக் கருதிய உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் சுரேஷ்குமாரின் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்தனர். அதில் அவருக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பது தெரியவந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.