மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன: கமல்

திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன: கமல்

அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன என்றும், விரைவில் அவற்றைச் செயல்படுத்தவுள்ளதாகவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும், அன்றைய தினமே அரசியல் பயணத்தைத் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். அதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.

ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், “நற்பணி என்பது நமக்கு புதிதல்ல, 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவரும் வேலைதான். தற்போது நற்பணியின் வீச்சு இன்னும் அதிகமாகப் போகிறது. மக்களை நோக்கிச் செல்லப்போகிறது. இத்தனை ஆண்டுகளாக என்னுடன் இருந்த நீங்கள் மூத்த சகோதரர்கள். நம்முடன் இன்னும் நிறைய சகோதரர்கள் இணையப்போகிறார்கள். நமது மன்றத்தின் செயல்பாடுகள் முன்னுதாரணத்துடன் இருக்கும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. விரைவில் செயல்படுத்த உள்ளோம்” என்று தெரிவித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 22 ஜன 2018