மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

அதிமுக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்!

அதிமுக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்!

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் காலில் விழுவதாக நடித்து அவரது முகத்தில் குத்திய வாலிபர் வசந்தாமணியை போலீசார் கைது செய்தனர்.

கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். இவர் நேற்று ( ஜனவரி 21) இரவு அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக போளூர் சென்றுள்ளார். திருமண மண்டபத்திற்குள் செல்வதற்கு முன்பு வாலிபர் ஒருவர் எம்.எல்.ஏ.விடம் ஆசி பெறுவதற்காக காலில் விழுந்துள்ளார். எம்.எல்.ஏ. அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட நிலையில், திடீரென அந்த வாலிபர் எம்.எல்.ஏவின் காலைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். சுதாரிப்பதற்குள் அவர் முகத்திலும் ஓங்கிக் குத்தித் தாக்கத் தொடங்கினார். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரைச் சுற்றிவளைத்துப் பிடித்துவிட்டனர்.

தாக்கப்பட்டதை தொடர்ந்து எம்.எல்.ஏ. மூக்கிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. காயமடைந்த எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். முன்னதாக எம்.எல்.ஏ. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வைத் தாக்கிய வாலிபர் வசந்தாமணியை போலீசார் கைது செய்தனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 22 ஜன 2018