மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: பிஸ்தா குல்பி!

கிச்சன் கீர்த்தனா:  பிஸ்தா குல்பி!

எவ்வளவுதான் பனி வருடினாலும் மதிய நேரத்தில் வெயில் கொளுத்தவே செய்கிறது. ஒரு ஜூஸ் குடித்தாலோ, ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலோ நன்றாக இருக்குமே என நினைக்கும்நேரத்தில் எங்கோ குல்பி ஐஸ் மணி சப்தம் காதில் ஒலிக்கும். மாடிப்படி இறங்குவதற்குள் காணாமல் போயிருக்கும். ஏமாற்றத்தைத் தவிர்ப்போம். ஏகாந்தமாய் வாழ்வோம். வீட்டிலேயே குல்பி ஐஸ் செய்வோம்.

தேவையானவை

பால் – 1 லிட்டர்

சர்க்கரை – கால் கப்

பிரெட் – 1 பெரிய துண்டு

பொடித்த பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

கார்ன்ஃப்ளோர் – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பிரெட்டின் ஓரங்களை வெட்டவும். நடுப்பகுதியை மிக்ஸியில் போட்டு அத்துடன் கார்ன்ஃப்ளோர், பால் அரை கப் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி கொதிக்கவைத்து, அது பாதியாகச் சுண்டி வரும்வரை காய்ச்சவும். பால் சுண்டியதும் அரைத்த விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும். பிறகு சர்க்கரை, பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து சர்க்கரை கரைந்ததும் இறக்கவும். ஆறவைத்து குல்பி அச்சு அல்லது டப்பாவில் ஊற்றி மூடிவைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெற வாய்ப்பில்லை: கடும் நிதி நெருக்கடியால் பேருந்து கட்டணம் உயர்வு - அமைச்சர் விளக்கம்.

கடும் நிதி நெருக்கடியில் எதுக்கு MLAக்கு ஒரு லட்சம் சம்பளம்?

கடும் நிதி நெருக்கடியில் எதுக்கு MGR நூற்றாண்டு விழா?

கடும் நிதி நெருக்கடியில் எதுக்கு MLAக்குப் புதிய கார்?

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 22 ஜன 2018