மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

தமிழக அரசின் ஸ்லீப்பர் பேருந்துகள்!

தமிழக அரசின் ஸ்லீப்பர் பேருந்துகள்!

பழைய பேருந்துகளுக்கு பதிலாக படுக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட 2,000 புதிய பேருந்துகளை வாங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எரிபொருள் கட்டண உயர்வு, பராமரிப்புக் கட்டண உயர்வு ஆகியவற்றால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, ஜனவரி 20 முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசுக்கு எதிராகப் பல அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஓட்டை உடைசலான பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமா என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் அதற்கான வசதியை அவர்கள் தருவதாகவும், ஆனால் அரசுப் பேருந்துகளில் எந்த வசதியும் செய்துதராமல் கட்டணத்தை மட்டும் பலமடங்கு உயர்த்தியிருப்பது வேதனை அளிப்பதாக மனம் குமுறுகிறார்கள்.

இந்நிலையில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை இயக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இணையாக நவீன வசதிகள் கொண்ட 40 ஸ்லீப்பர் பேருந்துகள், கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் உள்ளிட்ட 2,000 பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பேருந்துகள் மே மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் பங்களிப்புடன் வாங்கப்படவுள்ள 200 பேட்டரி பேருந்துகளைச் சென்னை மாநகரில் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018