மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

இந்தா தைப்புரட்சி 2.0 வந்துருச்சுல்ல :அப்டேட் குமாரு

இந்தா தைப்புரட்சி 2.0 வந்துருச்சுல்ல :அப்டேட் குமாரு

பஸ் கட்டணத்தை கூட்டுனா இருக்குற விலைவாசியெல்லாம் கூடிரும்னு மக்கள் வயித்துலயும் வாயிலயும் அடிச்சிகிட்டு புலம்பிக்கிட்டு இருக்காங்க. தஞ்சாவூர், திருப்பூர், திருவண்ணாமலை, சேலம்னு தமிழ்நாடு முழுக்க மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிச்சிட்டு போராட்டத்துல இறங்கியிருக்காங்க. பேஸ்புக், டிவிட்டர்ல ஸ்க்ரோல் பண்ணுனாலே போராட்ட போட்டோஸ், மீம்ஸ், ஸ்டேட்டஸ்னு குமியுது. நானும் காலையில இருந்து நியூஸ் சேனலை மாத்தி மாத்தி பார்த்துகிட்டு இருக்கேன். கமல் ரசிகர்களை சந்திச்சு குரூப் போட்டோ எடுக்குறத தான் காட்டிகிட்டு இருக்காங்க. ஆண்டாள் மேட்டர்ல மார்கழி புரட்சியை கம்ப்ளீட் பண்ணிட்டு அவர் வந்து புரமோசன் ஸ்டார்ட் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது. பசங்க தை புரட்சி பார்ட் 2 ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வருசமும் ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. இன்னும் என்னல்லாம் பார்க்கப் போறோமோ. கமல் வேற ஜெயலலிதா பிறந்தநாள் அன்னைக்கு பொதுக்குழு மீட்டிங் வெச்சிருக்காறாம். எந்த பாத்திரத்தை உடைக்கப் போறாரோ.

@yugarajesh2

அரசியலில் அதிமுகவின் வெற்றிடத்தை பாஜக நிரப்ப முயல்வது போல,

சினிமாவில் ரஜினியின் வெற்றிடத்தை நிரப்ப சரவணா ஸ்டோர் அண்ணாச்சி முயல்கிறார் போல

@HAJAMYDEENNKS

மெரினா மட்டும் இல்லையென்றால் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டாட ஒரு இடமே இல்லாமல் போயிருக்கும்...!

@Kozhiyaar

'பலி ஆடுகள்' கிடைத்தவுடன் 'கருப்பு ஆடுகளை' கண்டுக்கொள்வதில்லை நம் சமூகம்!!

@sThivagaran

விரல்களுக்குப் பேசக் கற்றுக்கொடுத்த தொழில்நுட்ப வளர்ச்சி வாயை ஊமையாக்கிவிட்டது!

@ajmalnks

அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு-உதயநிதி ஸ்டாலின்

அப்போ ஸ்டாலினோட முதல்வர் கனவு கனவுதானா?

@ajmalnks

சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிஸ் புறப்பட்டார் மோடி

போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு வரும்போது கருப்பு பணத்தை மீட்டுட்டு வரப்போறாரு...

@Thaadikkaran

அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..!

உங்களை கலாய்க்குறதுக்கான நேரம் வந்திருச்சு - மீம்ஸ் கிரியேட்டர்

@Latha943

போன வாரம்...பேருந்தில் ஏற பயந்தனர் ...டிரைவர்களால்!

இந்த வாரமும் ...பேருந்தில் ஏற பயப்படுகின்றனர்...

ஆட்சி செய்பவர்களால்!!

@Kozhiyaar

மேலே ஏற ஏற, நமக்கு கொம்பு முளைக்க ஆரம்பிக்கும்!!

அதை நாமே உணர்ந்து நறுக்கி கொள்வது நலம்!!

மற்றவர் நறுக்கி விட்டால் வலியும் வேதனையும் கடுமையானதாக இருக்கும்!!

@sultan_Twitz

அரசியலில் முழுமையாக ஈடுபடும் நேரம் வந்து விட்டது!- உதயநிதி ஸ்டாலின் #

வாழ்த்து சொல்ல நேரமும் வந்துவிட்டது! - வைகோ

@VKtwitz_Vicky

எம்.எல்.ஏக்களின் ஊதியஉயர்வால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது- அமைச்சர்

உதயகுமார்..

உங்களுக்கு என்னணே சுமை.. அதான் எங்க தலையிலே கட்டியாச்சே..

@ajay_aswa

என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல்

ஆண்டவர் நினைப்பு முழுவதும் இந்திய பிரதமரா ஆவுறதுலதான் இருக்கு போல.

@skpkaruna

கவர்னர் மக்களிடம் மனுக்கள் வாங்குகிறார்! முதலமைச்சர் இலவசத் திருமணங்களை நடத்துகிறார். கெரகம் புடிச்ச மாநிலமாயிருச்சே நம்ம தமிழகம்.

@ajay_aswa

ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு தலையீடாக இல்லை – கே.பி.அன்பழகன்

ஆட்சிய கலைக்காமல் வேற எது செய்தாலும் மாநில சுயாட்சிக்கு தலையீடாக இருக்காதுன்னு சொல்ல வர்றார் போல..

@DreamofWaves

திமுகவிற்கு தற்போது பேஸ்மட்டமும், பில்டிங்கும் பலவீனமாக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தலீவரே...

அ.தி.மு.க கோட்டை பலமா இருந்து எதற்கு...

புறம்போக்கு இடத்திலதான இருக்கு..

@ilavarasanoffcl

பல்லி தலையில விழுந்தா மரணம் என்பது உண்மைதான் போல பாவம் பல்லி அகால மரணம் அடைஞ்சுருச்சு..

@Rajayogiahgtwa1

சிறுவயதில் சைக்கிளில் தொடங்கிய சக்கர பயணம் மொபட் ஸ்கூட்டர் பைக் கார் பேருந்து ட்ரெயின் என வட்டம் போட்டு மீண்டும் சைக்கிளுக்கே திரும்புகிறது

@sultan_Twitz

மல்லிகைப்பூ கிலோ 6000 ரூபாய் வரை விலை உயர்வு - செய்தி #

மல்லி விக்கிற விலையை

பாத்தா "பெண்ணின் தலையில் இருந்த மல்லிப்பூ மர்மநபர்களால் பறிப்பு"னு நியூஸ் வந்தாலும் வரும் போல.

@smhrkalifa

தன் தாயுடைய இளம் பருவத்தை யாராலும் காண முடியாது என்பதால்,இறைவன் அதற்கு ஈடாக பெண் குழந்தையை அளித்து காண வைக்கிறான்.

@Rathikagenius

இரண்டு 'அடி' கொடுத்து உலகத்தை திருத்த நினைத்தவர் திருவள்ளுவர்

வாசுகி பாஸ்கர்

ஒரு கத்தி எவ்வளவு கூர்மையா இயங்குதுன்னு பரிசோதிக்க பதமான வெங்காயத்தை அறுத்து பார்ப்பதை விட, பழுத்த பழைய தக்காளியை அறுத்து பாக்குறப்ப தான் தெரியும்.

அந்த மாதிரி எளிய மனிதர்களோடு அரசியல் புரியாம பொருளாதாரம், கணிதம், லொட்டு லொசுக்கு படிச்சி பேசி என்ன ப்ரயோஜனம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018