மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

அரசியல் கருத்து: எங்கே சொன்னார் உதயநிதி?

அரசியல் கருத்து: எங்கே சொன்னார் உதயநிதி?

ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியலுக்குள் நுழையும்போது நான் அரசியலில் இறங்கக்கூடாதா? என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கான விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

அதன்படி அவர் கொடுத்திருக்கும் பல பேட்டிகளிலும் அரசியல் குறித்து பேசியிருக்கிறார். ஆனால், தி இந்துவின் இணையதள பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் லிங்க் மட்டுமே பல இடங்களிலும் பரவி வருகிறது. அதில் அவரிடம் கேட்ட கட்சிப்பணி குறித்த கேள்விக்கு மட்டுமே பதிலளித்திருக்கிறார். ‘அப்பா அழைத்தால் அரசியலுக்கு வருவேன்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில்தான் பல நடிகர்களும் அரசியலுக்கு வரும்போது, நான் வரக் கூடாதா என்று கேட்டிருக்கிறார். அத்துடன் தனது அடுத்தப் பட அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார். “நான் ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனது மார்க்கெட் எவ்வளவு என்பது எனக்குத் தெரியும். எனது படங்கள் பிரம்மாண்ட வெற்றியடையும் என்று கூற மாட்டேன். ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டும் வகையில் அமையக்கூடியவை. எனது அடுத்த படங்களையும் இதை மனதில் வைத்தே தேர்வு செய்கிறேன். சீனு ராமசாமி சார் இயக்கத்தில் நான் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. இது தவிர இரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ள பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். அறிமுக இயக்குநர் ஏநோக் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன். ஏநோக், அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அறிமுகத் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார்” என்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 22 ஜன 2018