மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஓராண்டில் நினைவு மண்டபம்!

ஓராண்டில் நினைவு மண்டபம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டுக்குள் நினைவு மண்டபத்தைக் கட்டி முடிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு நினைவு மண்டபம் வைக்க வேண்டும் எனப் பலரும் அரசுக்குக் கோரிக்கை வைத்த நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திலேயே நினைவு மண்டபம் கட்டத் தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த நினைவு மண்டபம் தொடர்பாக வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன. நினைவு மண்டபம் தொடர்பாகப் பொதுப்பணித் துறை சார்பில் பிப்ரவரி 7ஆம் தேதி டெண்டர் விடப்படும். ஆரம்பத் தொகையாக ரூ.43.63 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைவான தொகைக்கு டெண்டரைக் கோரும் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018