மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

குப்பை கொட்டும் இடங்களில் கோலம்!

குப்பை கொட்டும் இடங்களில் கோலம்!

திருச்சி மாநகராட்சி சார்பில் அதிக அளவில் குப்பை கொட்டும் இடங்களைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் அழகான கோலங்கள் போடப்படுகின்றன. தூய்மையில் திருச்சி மாநகராட்சியை முதலிடத்திற்குக் கொண்டுவர அதிகாரிகள் புதிய முயற்சியை எடுத்துவருகிறர்கள்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தரவரிசைப் பட்டியலில் திருச்சி மாநகராட்சி ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் திருச்சி மாநகராட்சியை முதலிடத்திற்குக் கொண்டுவர, அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அந்த முயற்சிகளில் ஒன்றாக, திருச்சியைக் குப்பைத் தொட்டி இல்லாத மாநகராட்சியாக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 700க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை அகற்றி, குப்பைகளைத் தரம் பிரித்துத் துப்புரவுப் பணியாளர்களிடம் நேரடியாகக் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க, வண்ணக் கோலங்களை வரைந்துள்ளனர். கோலம் போட்ட இடங்களில் குப்பையைக் கொட்டி அசிங்கப்படுத்த விரும்பாத மக்கள் குப்பை கொட்டுவதைத் தவிர்த்துவருகின்றனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 22 ஜன 2018