மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

ஆஷஸ் தொடரின் தோல்விக்குப் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேஷன் ராய் (19) மற்றும் ஜானி ப்ரிஸ்டவ் (39) சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தர தவறினர். அதன் பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் ஹால்ஸ் (1) மற்றும் ஜோ ரூட் (27) இருவரும் ஏமாற்றம் அளித்ததால் இங்கிலாந்து அணி மோசமான நிலையில் இருந்தது.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் இயான் மோர்கன் (41) நிதானமாக விளையாடி விக்கெட் சரிவிலிருந்து அணியைக் காப்பாற்றினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 பந்துகளில் சதம் அடித்தார். அவருடன் மறுமுனையில் சேர்ந்து அதிரடியாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 36 பந்துகளில் 53 ரன்களைச் சேர்த்தார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 302 ரன்களைச் சேர்த்தது.

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் (8) மற்றும் கேமரோன் ஒய்ட் (17) இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால், அதன்பின்னர் ஆரோன் பின்ச் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார்.

ஆனால், 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித்தும், 62 ரன்கள் சேர்த்த நிலையில் பின்ச்சும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ச் (55), மார்க்ஸ் ஸ்டோனிக்ஸ் (56) இருவரும் அறைசதம் அடித்து வெளியேறினர். அதன் பின்னர் களத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் டிம் பெய்ன் மற்றும் பேட் கம்மிஸ் இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். எனவே, இங்கிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரைக் கைப்பற்றியது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018