மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

கூடுதல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்!

கூடுதல் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்!

டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக 1000 நேரடிக் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பா சாகுபடிப் பருவம் முடிவடையவுள்ளதை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசின் சார்பில் குறைந்த அளவிலான கொள்முதல் நிலையங்களே செயல்பட்டுவருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள தனியார் நெல் வியாபாரிகளிடமோ அல்லது இடைத் தரகர்களிடமோ குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அரசின் சார்பில் நேரடிக் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜனவரி 22) அறிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லைக் கொள்முதல் செய்ய முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், “கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கிடைக்காத நிலையில், இதற்கு முன் 2013ஆம் ஆண்டில் சம்பா பயிரைக் காப்பாற்ற மேட்டூர் அணையின் நீர் இருப்பு 2 டிஎம்சியாகக் குறையும் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல், இப்போது தண்ணீர் திறக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

“கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைக்காத நிலையில் தற்போது நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி நடைபெற்ற மோட்டார் பாசனப் பகுதிகளில் அறுவடை தொடங்கியிருக்கிறது. ஆனால், சம்பா நெல்லை கொள்முதல் செய்ய போதுமான அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றைக் கொள்முதல் செய்ய இதுவரை 100-க்கும் குறைவான நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன" என்று விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 22 ஜன 2018