மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

பக்கா: நிக்கி கல்ராணி ஒப்பந்தமான பின்னணி!

பக்கா: நிக்கி கல்ராணி ஒப்பந்தமான பின்னணி!

பக்கா படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமான பின்னணி குறித்து நடிகை நிக்கி கல்ராணி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் பக்கா. அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கியிருக்கும் இதன் டீசர் வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 22) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் நிக்கி கல்ராணி, இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா, இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா பேசுகையில், “இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் பக்கா படம் முழுக்க முழுக்கத் திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. `பக்கா' ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும். இந்தக் கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை. ஆனால் நான் தேடிச் சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்தக் கதையைப் படமாக்க முன்வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன் பட்டுள்ளேன்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018