மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

நாடாளுமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ்

நாடாளுமன்றத் தேர்தலில் அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தின் முதலவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில், எம்.எல்.சி.யாகத் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஏற்கனவே அகிலேஷ் யாதவ் கன்னோஜ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதியில் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றாலும் டிம்பிள் யாதவ் மீண்டும் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 22 ஜன 2018