மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரண வழக்கு!

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரண வழக்கு!

நீதிபதி லோயா மரணம் குறித்த மனுக்கள் அனைத்தும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று (ஜனவரி 22) உத்தரவிட்டது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்துவந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று புனே நகரில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக, லோயாவின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதுபற்றிய வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதே வேளையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நபர் அமர்வும், இது குறித்த பொதுநல மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகள், லோயாவின் மரண வழக்கு விசாரணை பற்றியும் தங்களது பேட்டியில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, மனுதாரர்கள் கேட்கும் தகவல்களை மகாராஷ்டிரா மாநில அரசு அளிக்க வேண்டும் என்று டெல்லி உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 22) நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு. லோயா மரணம் தொடர்பான புதிய மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், இது தொடர்பான வழக்கு விவரங்களை பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும், நீதிபதி லோயா மரணம் தொடர்பான ஆவணங்களைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியுள்ளது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 22 ஜன 2018