மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஒரு ரன்னில் இழந்த சாதனை!

ஒரு ரன்னில் இழந்த சாதனை!

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டியில் கொலின் முன்ரோவின் அதிரடியால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதில் 5 ஒருநாள் போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து அணி முதல் டி- 20 போட்டியிலும் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள வெஸ்ட்பேக் மைதானத்தில் இன்று (ஜனவரி 22) தொடங்கிய முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. எனவே 19.4 ஓவரில் பாகிஸ்தான் அணி 105 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் (2), க்லீன் ப்ளிப்ஸ் (3) இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனவே பாகிஸ்தான் அணிக்குச் சிறிது நம்பிக்கை கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கொலின் முன்ரோ மற்றும் டாம் புரூஸ் இருவரும் சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

டாம் புரூஸ் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் கொலின் முன்ரோவுடன் இணைந்த ராஸ் டைலர் அதிரடியாக விளையாடி 15.5 ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தார். டி-20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கொலின் முன்ரோ 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதற்கு முன்னதாக அவர் 3 டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்து நான்காவது அரைசதத்தை அடித்திருந்தால், தொடர்ச்சியாக டி-20 போட்டிகளில் 4 அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 22 ஜன 2018