மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

கேரளாவில் பிரசித்தி பெற்ற மஞ்ச் முருகன்

கேரளாவில் பிரசித்தி பெற்ற மஞ்ச் முருகன்

கேரளாவில் உள்ள முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வினோத முறையில் நேர்த்திக் கடனாகவும், பிரசாதமாகவும் `மஞ்ச்' சாக்லேட் கொடுக்கப்பட்டுவருகிறது.

கேரளாவின் ஆலப்புழா நகரின் புறநகர் பகுதியில் உள்ள சுப்ரமணியபுரத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. பொதுவாக இந்துமத தெய்வங்களுக்கு மிகவும் பிடித்த பொருட்களாக ஐயப்பனுக்கு நெய், கிருஷ்ணருக்கு வெண்ணெய், விநாயகருக்கு மோதகம் ஆகியவற்றைப் படைப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பாலமுருகனுக்கு மிகவும் பிடித்தமான பண்டமாக மஞ்ச் சாக்லேட் படைக்கப்பட்டுவருகிறது. இதற்குப் பின்னணியாக சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக ஒரு சம்பவத்தை உள்ளூர் மக்கள் விவரிக்கின்றனர்.

இந்த பாலமுருகன் ஆலய வளாகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, விளையாட்டாக அங்குள்ள ஆலய மணியின் கயிற்றைப் பிடித்து மணியை ஒலிக்க வைத்துள்ளது. இதைக் கண்டு பதறிப்போன பெற்றோர், குழந்தையைக் கண்டித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்று இரவில் இருந்து கடுமையான காய்ச்சலுக்கு உள்ளான குழந்தை, `முருகா, முருகா' என்று தன்னையும் அறியாமல் முணுமுணுக்கத் தொடங்கவே மறுநாள் குழந்தையின் பெற்றோர் இந்தக் கோயிலுக்கு வந்து பூசாரியிடம் நடந்த விபரத்தைக் கூறினர்.

எண்ணெய்யும், புஷ்பங்களும் பரிகாரமாக அளித்தால் நல்லது என்று பூசாரி அறிவுறுத்தினார். பெற்றோரும் குழந்தையுடன் சென்று அவ்வாறு செய்த வேளையில், கருவறைக்குச் சென்ற குழந்தை தனது கையில் இருந்த மஞ்ச் சாக்லேட்டை பாலமுருகனுக்கு அளித்து மகிழ்ந்தது. இதையடுத்து, குழந்தையை பிடித்திருந்த காய்ச்சல் உடனடியாக நீங்கவே, இந்த ஆலயத்தில் உள்ள முருகனுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் மஞ்ச் சாக்லேட் தான் என்ற செவிவழிச் செய்தி பரவ ஆரம்பித்தது. இதையடுத்து, இந்த பாலமுருகன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் முருகனுக்கு மஞ்ச் சாக்லேட்களை நேர்த்திக்கடனாகச் செலுத்தத் தொடங்கினர். மேலும், சிலர் தங்களது வேண்டுதல் நிறைவேறியமைக்காக எடைக்கு எடை ‘மஞ்ச் துலாபாரம்’ செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கின்றனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 22 ஜன 2018