மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஷாப்பிங் ஸ்பெஷல்: வீட்டை அழகாக்க தனி கலை வேண்டுமா?

ஷாப்பிங் ஸ்பெஷல்: வீட்டை அழகாக்க தனி கலை வேண்டுமா?

வீட்டுக்கு என்று தனியாக ஓர் ஆளுமைத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இன்று பலரும் ஆர்வம்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தைச் செயல்படுத்த நினைப்பவர்கள் வீட்டின் அறைகலன்களையும் அலங்காரப் பொருள்களையும் தனித்துவத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் வைத்து வீட்டுக்கான தனி கலையை நீங்களே வடிவமைக்க முடியும்.

பழைமையின் அழகு

உங்களுடைய வீட்டை ரசனைக்குப் பொருந்தும்படி பாரம்பர்யமான பொருள்களை வைத்து அலங்காரம் செய்தால் அது ஒருவிதமான ஆளுமையான தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்கும். ஒரு பாரம்பர்யமான வடிவமைப்பைக்கொண்ட சுவர்க்கடிகாரத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டிவைக்கலாம். ஒருவேளை, உங்களுடைய வீட்டின் முந்தைய தலைமுறை பயன்படுத்திய கடிகாரம் இருந்தால் அதைச் சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாம். இது வீட்டுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றம் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும்.

சிற்றுருவச் சிலைகள்

அலங்கரிப்பதற்குச் சிற்றுருவச் சிலைகளைப் பயன்படுத்துவது வீட்டுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். கம்பீரமான தோற்றத்தை விரும்புபவர்கள் வீட்டில் சிற்றுருவச் சிலைகளைப் பயன்படுத்தலாம். குதிரை, யானை, பறவைகள் போன்றவற்றின் சிற்றுருவச் சிலைகளை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம். வரவேற்பறை மேசைகள், பால்கனி, தோட்டம் போன்ற இடங்களில் இவற்றை வைக்கலாம். இந்தச் சிலைகள் வீட்டின் ஆளுமையைக் கம்பீரமானதாகக் காட்டும்.

தோட்டம்

தோட்டம் வைப்பதற்கு என்று தனியாக இடமில்லையென்றாலும் வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன உட்புறத் தோட்டத்தை உருவாக்கலாம். வீட்டில் இருக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்து இந்தத் தோட்டத்தை உருவாக்கலாம். உதாரணமாக, உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாத சைக்கிள் இருந்தால் அதைச் செடிகளை வைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த மாதிரியான உட்புறத் தோட்ட அலங்காரம் நகர்ப்புறங்களில் பிரபலமாக இருக்கிறது.

பெட்டிகளும் கண்ணாடிகளும்

வீட்டின் பழைய மரப்பெட்டிகளும் கண்ணாடிகளும் இருந்தால் அவற்றுக்குப் புதிய வடிவம் கொடுத்துப் பயன்படுத்தலாம். இதுவும் வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்கும் வழிகளில் ஒன்று. பெட்டியை வரவேற்பறையிலும் கண்ணாடியைப் படுக்கையறையிலும் வைக்கலாம். இந்த இரண்டு பொருள்களையும் மற்ற பொருள்களோடு சேர்த்து வைக்காமல் அறையில் தனித்துத் தெரியும்படி வைக்கலாம்.

சுவர்களும் மேசைகளும்

நேர்த்தியும் பாரம்பர்யமும் நிறைந்த ‘வால் ஹேங்கிங்ஸை’(Wall hangings) சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்குப் பழைமை கலந்த வசீகரத் தோற்றத்தைக் கொடுக்கும். மேசைகளில் ‘ஹவர் கிளாஸ்’ போன்ற உங்களுக்கு ரசனைக்குப் பொருந்தும்படியான பொருள்களை வைத்து அலங்கரிக்கலாம். இப்படி உங்களுடைய ஆளுமையைப் பறைசாற்றும் பொருள்களை வைத்தே வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்க முடியும்.

சுவர்களில் ஓவியங்கள் வரையும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. கற்கால மனிதன் பாறைகளில் தங்கள் வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் ஓவியமாகத் தீட்டியதை, இதன் தொடக்கமாகச் சொல்லலாம். ஐரோப்பிய நாடுகளில் தேவாலயங்களில் ஓவியங்கள் வரைவது வழக்கமாக இருந்தது. மேற்குலகில் மிகச் சிறந்த ஆளுமைகள் உருவாக இது காரணம் ஆனது. இந்தியாவிலும் பரவலாகக் கோயில்களில், அரண்மனைகளில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஓவியங்கள்

வீட்டின் வரவேற்பறையும், படுக்கையறையும் ஓவியங்கள் மாட்டிவைப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரண்டு அறைகளிலும் உங்களுக்குப் பிடித்த மாதிரியான ஓவியங்களை மாட்டிவைக்கலாம். இயற்கையைப் பறைசாற்றும் மலர்கள், மரங்கள், மலைகள் போன்ற ஓவியக் காட்சிகள் இந்த இரண்டு அறைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

கலம்காரி ஓவியம்

ராமாயணக் காவியத்தில் ஜனக மன்னன் தன் மகளான சீதாவின் திருமணத்துக்காக மிதிலா நகர் முழுவதும் ஓவியங்கள் வரையச் சொன்னதாகத் தொன்மக் கதையுண்டு. இப்படித்தான் மிதிலா ஓவியக் கலை உருவானதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய பீகார் மாநிலத்தில் மதுபனி என்னும் மாவட்டப் பகுதியில் தோன்றியதால் இந்த ஓவியக் கலைக்கு மதுபனி என்ற பெயரும் உண்டு. இந்த மதுபனி - நேபாள எல்லையில்தான் ராமாயண இதிகாசத்தில் வரும் மிதிலை நாடும் உள்ளது.

மந்தனா ஓவியம்

இதுபோல அரண்மனையில் வரையப்படும் ஓவியங்கள் அல்லாமல் பழங்குடிகள் தங்கள் வீட்டுச் சுவர்களில் ஓவியங்கள் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது ‘கோண்டு’ என அழைக்கப்படுகிறது. இவர்கள் வடஇந்தியாவில் கிழக்கு மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவலாக வாழ்ந்துவருகிறார்கள். கோண்டு இனத்தவர் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட பழங்குடிகள் ஆவர். கோண்டு பழங்குடியினர் தங்கள் சமய வழிபாட்டுச் சடங்கின்போதும் திருமணம் போன்ற நிகழ்வின்போதும் வீட்டுச் சுவர்களை ஓவியங்களால் அலங்கரிக்கிறார்கள்.

பட்டச்சித்ரா ஓவியம்

ஓவியத்துக்கான வண்ணங்களைக் கரி, மண், தாவரங்கள், மாட்டுச் சாணம் போன்றவற்றிலிருந்து எடுக்கிறார்கள். ஓவியங்கள், தெய்வ, இயற்கை வழிபாட்டுக்காக வரையப்படுபவை எனச் சொல்லப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து ஓவியங்கள் தங்களைக் காக்கும் என்னும் நம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

பாஹரி ஓவியம்

வீட்டுச் சுவர்களில் வண்ணம் அடிப்பதற்குப் பதிலாக ஓவியங்கள் வரைவது வழக்கம் பரவலாக வருகிறது. முக்கியமாக வார்லி ஓவியங்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கலம்காரி, பட்டச்சித்ரா, செரியல் ஆகிய ஓவியங்கள் பெரும்பாலும் துணிகளில்தான் வரையப்படுகின்றன. அவற்றைச் சட்டகமாக்கி வீட்டுச் சுவர்களை அழகுபடுத்தலாம்.

வார்லி ஓவியம்

இவை அல்லாமல் கலம்காரி, பட்டச்சித்ரா, வார்லி, பாஹரி, செரியல், கேரள சுவர் ஓவியம் உள்ளிட்ட பல வகை மரபு ஓவியங்கள் இன்று புதுப்பொலிவு பெற்று வீட்டை அலங்கரித்துவருகிறது. அவற்றைக் குறித்த ஒளிப்படத் தொகுப்பு இது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018