மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

'பத்மாவத்' : தொடரும் எதிர்ப்பு!

'பத்மாவத்' : தொடரும் எதிர்ப்பு!

பத்மாவத் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளன.

தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் பத்மாவதி என்ற பெயரில் படம் வெளியாக இருந்தது. இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு சில மாநிலங்கள் தடையும் விதித்தன.

எனவே படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், படத்தின் பெயரும் ‘பத்மாவத்’ என மாற்றப்பட்டது. இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 25-ந்தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்தப் படம் திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்றுகூறி ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் இந்தப் படத்துக்கு தடை விதித்தன. இது தொடர்பாக குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவிப்பும் வெளியிட்டன. இந்தத் தடையை எதிர்த்து ‘பத்மாவத்’ திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, படத்துக்கு 4 மாநில அரசுகள் விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது

இதனால், ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது எனக் கூறி சில வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. இதனால், அந்த மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 22 ஜன 2018