மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

பேருந்துக் கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டம்!

பேருந்துக் கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டம்!

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்துக் கட்டணம் நள்ளிரவில் கடுமையாக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு ஜனவரி 20 முதல் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்த்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களாகப் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இன்று(ஜனவரி 22) தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேருந்து கட்டண உயர்வுக்குஎதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டத்தில்ஈடுபட்டனர். கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கட்டணஉயர்வைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து கிராமங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் மற்றும் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டினார்கள்.

இதேபோல பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்தச் சாலை மறியல்போராட்டத்தால் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 22 ஜன 2018