படப்பிடிப்பில் மயங்கி விழுந்த மகேந்திரன்


படப்பிடிப்பின்போது மயங்கிய விழுந்த இயக்குநர் மகேந்திரனுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்த அவர் தற்போது அருள்நிதி நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். கரு.பழனியப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற படப்பிடிப்பின்போது மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே படக் குழுவினர் அவரைப் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.