மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஜிஎஸ்டியில் பெட்ரோலியப் பொருட்கள்!

ஜிஎஸ்டியில் பெட்ரோலியப் பொருட்கள்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின் கீழ் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 21ஆம் தேதி உஜ்ஜைனில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான், “பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். இதை நடைமுறைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் குழுவும் விரைவில் இணங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெட்ரோலியப் பொருட்களின் விலையைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவில் அவற்றின் விலை உயருவதால்தான் இந்தியாவிலும் விலை உயருகிறது. அதேநேரம் மாநில அரசுகளும் பெட்ரோலுக்கு வரி விதிப்பதால் விலை இன்னும் அதிகமாக உள்ளது” என்று கூறியவர், எரிவாயுவை மிச்சப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்தூரில் ‘ஷாக்சம் சைக்லோத்தான்’ நிகழ்வில் பங்கேற்று சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018