மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஒரே நாளில் களமிறங்கிய சூர்யா, தனுஷ்

ஒரே நாளில் களமிறங்கிய சூர்யா, தனுஷ்

தங்களது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை சூர்யாவும், தனுஷும் ஒரே நாளில் தொடங்கியுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜியும் தனுஷும் மீண்டும் இணைந்து மாரி படத்தின் இரண்டாம் பாக பணிகளை தொடங்கியுள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 22) துவங்கியுள்ளது.

இதே நாளில் சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்திற்கான படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கியுள்ளது. சூர்யா, தனுஷ் ஆகிய இருவரின் படங்களுக்கும் சாய் பல்லவியே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் சூர்யா, தனுஷ் இருவரது படங்களின் படப்பிடிப்பு துவங்கி இருப்பதால் இரண்டு படங்களுக்குமான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 22 ஜன 2018