மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

தமிழகத்தில் பாஜக கால் பதிக்காது!

தமிழகத்தில் பாஜக கால் பதிக்காது!

அரியலூரில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதவெறியைத் தூண்டி அரசியல் அடித்தளத்தை அமைத்துக்கொள்ள நினைப்பவர்களின் முயற்சி பலிக்காது என்று கூறினார்.

திராவிடர் கழக சமூகநீதி மாநாடு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜெயங்கொண்டத்தில் தி.க. பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்ததற்குக் கண்டனம் தெரிவித்தார். "திராவிடர் கழகம் சார்பில் நடைபெறவிருந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் ஆர்எஸ்எஸ்ஸின் ஊர்வலத்திற்கு அனுமதி தந்திருக்கின்றனர்; தமிழகத்தை அமைதிப்பூங்காவாகப் பார்த்துக்கொள்ளும் தி.க.விற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இது ஒருதலைப்பட்சமான செயல். இதற்கான விலையைத் தமிழக அரசு தேர்தலுக்கு முன்பே கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்தைத் திரித்து, தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்தார். அதோடு, பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “மதவெறியைத் தூண்டி தமிழகதில் கால் ஊன்றுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. என்ன முயற்சி செய்தாலும், எவ்வளவு நோட்டு கொடுத்தாலும், நோட்டாவை விட அதிக இடத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாது. நோட்டாவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி” என்றார்.

வைரமுத்து விவகாரத்தில் நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி மவுனமாக இருப்பது குறித்த கேள்விக்கு, “அதுபற்றி கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு ஆழமான சிந்தனையும் துணிச்சலும் அவர்களுக்குக் கிடையாது என்பது இதன் மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதே அவர்களது நிலைப்பாடு” என்று விமர்சனம் செய்தார் வீரமணி.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018