மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது!

வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது!

ஜியோ-பிலிம்பேர் விருது விழாவில் வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

63ஆவது ஜியோ-பிலிம்பேர் விருது விழா மும்பையில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 20) இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஷாருக் கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினர். இதில் 2017ஆம் ஆண்டின் சிறந்த பாலிவுட் படங்கள், நடிகர், நடிகைகள் என 26 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த படத்துக்கான விருது ‘இந்தி மீடியம்’ திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பரேலி கி பர்பி’ படத்தை இயக்கிய அஸ்வினி அய்யருக்கு வழங்கப்பட்டது. ‘இந்தி மீடியம்’ படத்தில் சிறப்பாக நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘தும்ஹாரி சுலு’ படத்தில் சிறப்பாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது மாலா சின்ஹாவுக்கும் பப்பி லஹிரிக்கும் வழங்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018