மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

காதலரைக் கரம் பிடித்த பாவனா

காதலரைக் கரம் பிடித்த பாவனா

நடிகை பாவனா தனது நீண்ட நாள் காதலரான தயாரிப்பாளர் நவீனை இன்று (ஜனவரி 22) மணந்தார்.

நடிகை பாவனாவும், கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் நவீனும் 6 ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. அந்த தருணத்தில், அதே ஆண்டு அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவில்லை. அவர்களின் திருமணம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள திருச்சூர் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோயிலில் பாவனா, நவீன் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை லூலு கன்வென்ஷன் ஹாலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனாவுக்கு மெஹந்தி அணிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகை ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மலையாள நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். பாவனாவின் திருமணத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 22 ஜன 2018