தகவல்களைத் திருடும் போலி வாட்ஸ்அப்!


டிஜிட்டல் உலகில் தகவல் திருட்டு என்பது அதிகரித்துவரும் நிலையில், வாட்ஸ்அப் போன்ற வடிவமைப்பில் வெளியாகியுள்ள புதிய அப்ளிகேஷன் லிங்க் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேக்கர்ஸ்கள் போலியான லிங்க்குகளை வடிவமைத்து அதனைப் பயனர்கள் கிளிக் செய்வதன் மூலம், அவர்களது கணினி அல்லது ஸ்மார்ட் போன்களில் வைரஸ்களை நுழைக்கின்றனர். இதனால் பயனர்கள் பயன்படுத்தும் தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரியவரும். எனவே பயனர்களின் முக்கியமான பல்வேறு தகவல்கள் திருடப்பட்டுவருகின்றன.
வாட்ஸ்அப் போல் காட்சியளிக்கும் போலியான செயலியை ஹேக்கர்ஸ்கள் வெளியிட்டுள்ளனர். Dark Caracal என்ற புதிய அப்ளிகேஷன்தான் பயனர்களின் தகவல்களை அதிகம் தற்போது பாதித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனா, அமேரிக்கா, ரஷ்யா உட்பட மொத்தம் 21 நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.