மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

த்ரில் வெற்றி பெற்ற ஜம்ஷெத்பூர் அணி!

த்ரில் வெற்றி பெற்ற ஜம்ஷெத்பூர் அணி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற முதல் போட்டியில் ஜம்ஷெத்பூர் அணி, டெல்லி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக்கின் நான்காவது சீசன் சுவாரஸ்யமான நிலையை எட்டியுள்ளது. தொடரின் முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்து, இரண்டாவது பாதி ஆட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும், அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெற்று வருகின்றன. இனி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அனைத்து அணிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எனவே, நேற்று நடைபெற்ற போட்டியும் மிக சுவாரஸ்யமாக நடைபெற்றது.

நேற்று ஜம்ஷெத்பூரில் நடைபெற்ற போட்டியில் ஜம்ஷெத்பூர், டெல்லி அணிகள் பலபரீட்சை நடத்தினர். முதலில் டெல்லி அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. டெல்லி அணி வீரர் க்ளு யுச்சே போட்டியின் 20 மற்றும் 22ஆவது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். ஜம்ஷெத்பூர் அணி வீரர் ஜோஸ் லூயிஸ் 29ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். முதல் 30 நிமிடத்துக்குள் மூன்று கோல்கள் அடிக்கப்பட்டதால் போட்டியின் சுவாரஸ்யம் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது.

அதன்பின்னர், இரண்டு அணி வீரர்களும் சரிசமமாக விளையாடியதால் முதல் பாதியில் டெல்லி அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் யும்னம் ராஜு 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததால் ஜம்ஷெத்பூர் அணி 2-2 என போட்டியை சமன் செய்தது.

போட்டி சமன் செய்யப்பட்ட பிறகு ஜம்ஷெத்பூர் அணி வீரர்கள் முழுவதுமாக கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதைப் பயன்படுத்தி கோல் அடிக்க முயன்ற டெல்லி வீரர்கள் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டனர். ஆனால், போட்டியின் 86ஆவது நிமிடத்தில் ஜம்ஷெத்பூர் அணி வீரர் மேத்யூஸ் ஒரு கோல் அடித்து 3-2 என அணியை முன்னிலை பெற செய்தார். உள்ளூர் மக்களின் ஆதரவினால் ஜம்ஷெத்பூர் அணி, டெல்லி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் ஜம்ஷெத்பூர் அணி நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரண்டாவது போட்டியில் கோவா மற்றும் கேரள அணிகள் மோதின. அதில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018