கூகுள் டூடுல்: சோவியத் திரைப்படக் கலைஞர்!


சோவியத் நாட்டின் பிரபல திரைப்பட இயக்குநரான செர்ஜி ஐசென்ஸ்டைனின் 120ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இன்று (ஜனவரி 22) கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவருடைய படத்தைப் பின்புலமாக கொண்டு ரீல்களுடன் வடிவமைத்துள்ளது.
1898ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி சோவியத் ரஷியாவிலுள்ள லடிவியா நாட்டில் பிறந்தவர் செர்ஜி ஐசென்ஸ்டைன். இவர் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது, 1918ஆம் ஆண்டு படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ரஷ்யப் புரட்சியில் இணைந்தார். தொடர்ந்து, 1920ஆம் ஆண்டு மாஸ்கோவில் உள்ள புரோலெட்கல்ட் என்ற நிறுவனத்தில் இணைந்து திரைப்படப் பயிற்சி பெற்று, 1925ஆம் ஆண்டு `ஸ்ட்ரைக்' என்ற முதல் ஊமைப்படத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இவரது 'பேட்டில்ஷிப் பொடெம்கின்', `தி ஜெனரல் லைன்' ஆகிய திரைப்படங்கள் மிகவும் பிரசத்தி பெற்றதாக விளங்கியது. இவரது படைப்பாற்றலைக் கண்டு வியந்த திரைத் துறை, இவருக்கு லெனின் விருது, ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தது.