மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

55 மீட்டர் கோல்: பிறந்தநாள் பரிசு!

55 மீட்டர் கோல்: பிறந்தநாள் பரிசு!

ஸ்பெயின் நாட்டிலுள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி 20) நடைபெற்ற ஒரு போட்டியில் கோல் கீப்பர் அடித்த கோல் கால்பந்து உலகில் அதிகம் பேசப்பட்டுவருகிறது.

ஸ்பெயின் நாட்டின் பல்வேறு கால்பந்து அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அன்று சி.டி.லூகோ , டீ ஜிஜோன் அணிகள் மோதின. சுவாரஸ்யமாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 80ஆவது நிமிடம் போட்டியின் முடிவின்போது சி.டி.லூகோ அணிக்கு கார்னர் கிக் முறை வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்தும் பொழுது எதிரணி வீரர்கள் சிறப்பாகத் தடுத்து அதனை எதிர்ப்புறம் எடுத்துச்சென்றனர். மைதானத்தின் பாதி தூரத்தைp பந்து கடந்திருந்தபோதே சி.டி.லூகோ அணியின் விக்கெட் கீப்பர் ஜான் கார்லஸ் கோல் போஸ்டினை விட்டு ஓடிவந்து, களத்தின் பாதியிலேயே கோல் அடித்து அசத்தினார். இதனால் சி.டி.லூகோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சுமார் 55 மீட்டர் தொலைவிலிருந்து ஒரு கோல் கீப்பர் கோல் அடித்தது கால்பந்து உலகில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. அது மட்டுமின்றி ஜான் கார்லஸ் தன் பிறந்தநாள் அன்று இந்த கோலை அடித்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018