மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை மத்திய அரசு நேற்று (ஜனவரி 21) நியமித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜனவரி 22) நிறைவடைகிறது. இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் நாளை பதவியேற்க உள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தை சார்ந்த ஓம் பிரகாஷ் ராவத் 1977ஆம் ஆண்டு பிரிவைச் சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். 64 வயதடைந்துள்ள ஓம் பிரகாஷ் ராவத், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கனரக தொழில் துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றிய ஓம் பிரகாஷ் ராவத், 1993ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையில் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மத்தியப்பிரதேச அரசின் முதன்மை செயலாளராக 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணியாற்றியுள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018