மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ரஜினி மக்கள் மன்றம்: முதன்முறையாக நிர்வாகிகள் நியமனம்!

ரஜினி மக்கள் மன்றம்: முதன்முறையாக நிர்வாகிகள் நியமனம்!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பின்பு, முதன்முறையாக வேலூர் மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கட்சி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்றன. ரஜினி மன்றம் என்ற செயலியையும், இணையப் பக்கத்தையும் ஆரம்பித்த ரஜினிகாந்த், அடுத்து ரசிகர் மன்றம் என்ற பெயரை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி வேலூரிலுள்ள தனியார் ஹோட்டலில் ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி மன்ற நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாகவும், ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு முதன்முறையாகவும் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மன்ற நிர்வாகி சுதாகர் நேற்று (ஜனவரி 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மன்ற வேலூர் மாவட்டச் செயலாளராக சோளிங்கர் ரவி, இணைச் செயலாளராக நீதி என்ற அருணாசலம் ,மாவட்ட துணை செயலாளர்களாக வாணியம்பாடி கணபதி, ராஜன் பாபு, முகமது கலீபா, மகளிர் அணி செயலாளராக சங்கீதா, இளைஞர் அணி செயலாளராக அருண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 22 ஜன 2018