மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்துக் கொன்ற போலீஸ்!

ஹெல்மெட் அணியாமல் வந்தவரை அடித்துக் கொன்ற போலீஸ்!

மேற்கு வங்க மாநிலத்தில் வாகனச் சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரை போலீஸார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலில் உள்ளது. அங்கு போலீஸாருக்கு உதவும் வகையில் சமூகப் பணியாளர்களையும் போலீஸ் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கும் போலீஸுக்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பாரகன் மாவட்டம், மத்திய மக்ராம் நகரில் இரண்டு போலீஸார் (சமூகப் பணியாளர்கள்) வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சவுமன் தேப்நாத் என்பவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அபராதம் விதித்தனர். ஆனால், சவுமன் அபராதம் செலுத்த மறுத்ததால், போலீஸாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போலீஸார், சவுமனை அடித்து உதைத்தனர்.

இதில் சவுமன் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டவுடன் போலீஸ்காரர்கள் இருவரும் உடனடியாகத் தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சவுமனைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். இந்தச் சம்பவத்தை அடுத்து உள்ளூர் போலீஸ் நிலையத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018