மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

அடுத்த கட்டத்துக்குச் செல்லும் தமன்னா

அடுத்த கட்டத்துக்குச் செல்லும் தமன்னா

இனிவரும் படங்களில் இதுவரை இல்லாத வித்தியாச வேடங்களில் நடிக்கவுள்ளதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவருகிறார். மேலும், முதன்முறையாக மராத்தி படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராம் குமார் ஷெக்டே இயக்கும் இந்தப் படத்துக்கு ‘ஏ.பி.சி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் தமன்னா ஸிஃபி இணையதளப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறேன். ஸ்கெட்ச் படத்துக்குப் பிறகு தமிழில் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குயின்’ ரீமேக்கிலும் மேலும் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன். தற்போது வரை ஐந்து படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான நல்ல வேடங்களில் நடிக்கிறேன். இதுவரை நடிகர்களை மட்டுமே மனதில் கொண்டு கதை எழுதிவந்தார்கள். அந்த நிலை மாறி, நடிகைகளை மனதில் வைத்துக் கதை எழுதும் காலம் இப்போது உருவாகி இருக்கிறது. இதன் மூலம், கதை எழுதும்போதே நாயகிகளின் பாத்திரங்களுக்கும் தேவையான அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018