மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

பியூட்டி ப்ரியா: பொடுகு தொல்லை தீர எளிய வழிகள்!

பியூட்டி ப்ரியா: பொடுகு தொல்லை தீர எளிய வழிகள்!

பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி ஒரு டீஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

வசம்பை தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பைப் பயன்படுத்தி தலையைச் சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதைத் தடுக்கும். சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்துக் குளித்துவந்தால் பொடுகு நீங்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர், பொடுகை நீக்க உதவுகிறது.

பாலுடன் மிளகு பவுடரைச் சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.

தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம் அல்லது வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்தும் தலையை அலசலாம்.

பசலைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வெந்தய பவுடரைத் தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும். உடல் சூடு குறையும்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்துவர பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.

அறுகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

வேப்பிலைச் சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்துவரலாம். வசம்பு பவுடரைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தேய்க்கலாம்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 22 ஜன 2018