2018: சிறுதானிய ஆண்டு!


நடப்பு பருவ ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அங்கீகரித்துள்ளதாகக் கர்நாடக மாநிலப் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
இயற்கை மற்றும் சிறுதானிய உணவுக்கான சர்வதேச வர்த்தகக் காட்சியை வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) தொடங்கிவைத்த புள்ளியல் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கூறுகையில், “வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நடப்பு பருவ ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார். குறைந்த நீர்ப்பாசனத்தில் அதிக உற்பத்தி தரும் ஊட்டசத்துமிக்க ராகி மற்றும் பல சிறுதானிய வகைகளை ஊக்குவிப்பதற்காகவும் பரம்பரகாட் கிருஷி விகாஸ் யோஜனா என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது” என்றார்.