மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 ஜன 2018

நான் தவறவிட்ட இரு படங்கள்: பார்வதி நாயர்

நான் தவறவிட்ட இரு படங்கள்: பார்வதி நாயர்

இயக்குநர் கதை கூறும்போது கண்டிப்பாக வெற்றி பெறும் எனத் தோன்றும் பல படங்கள் சினிமாவாக உருமாறி திரையரங்கில் பார்க்கும்போது மோசமான அனுபவத்தைத் தந்துவிடுகின்றன. இந்தக் கதாநாயகன் ஏன் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டார் என்பது தொடர்ந்து ரசிகர்கள் முணுமுணுக்கும் கேள்வியாக இருக்கிறது. அதேசமயம் கதையாகக் கேட்கும்போது பெரிய அளவில் ஈர்க்காத சில படங்கள் சினிமாவாகப் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தைத் தருகின்றன. நடிகர் கதையைத் தேர்ந்தெடுக்கும் நுட்பமும் இயக்குநர் கதையைத் திரைமொழிக்கு கடத்துவதில் உள்ள சூட்சுமமும் ஒரே புள்ளியில் இருக்கும்போது படம் எதிர்பார்த்தபடியே வெற்றி படமாக அமைந்துவிடுகிறது. அது நிகழாதபோது இந்தப் படத்தில் ஏன் தான் நடித்தேனோ என நொந்துகொள்வதும், இந்தப் படத்தை ஏன் தவறவிட்டேனோ என வருத்தப்படுவதும் நடக்கிறது. தற்போது பார்வதி நாயர் இரு படங்களைத் தான் தவறவிட்டதற்காக வருந்தியுள்ளார்.

என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம்பெற்றவர் பார்வதி நாயர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள நிமிர் திரைப்படம் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இவர் பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் அருவி, அர்ஜுன் ரெட்டி ஆகிய இரு படங்களின் வாய்ப்புகள் தனக்கு வந்தபோது அதைத் தவிர்த்ததற்கு வருத்தப்பட்டுள்ளார்.

“அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் என்னிடம் கதை கூறும்போது அதில் நடிக்க நான் தயங்கியதற்குக் காரணம் படுக்கையறை காட்சிகளும், லிப் லாக் காட்சிகளும் இருந்ததே. மேலும், கதாநாயகன் விஜய் தேவரகொண்டா அப்போது அறிமுகமாகவில்லை. பெல்லி சூப்புலு படம் வெளியாகியிருக்கவில்லை. இயக்குநருக்கும் முதல் படம். கதையை முழுவதும் படித்துப் பார்த்தேன். சாதாரண திருப்பங்களோடு கதை அமைந்திருந்தது. இயக்குநரின் திறமையை என்னால் கணிக்க முடியவில்லை. அதனால் அந்த வாய்ப்பை தவிர்த்தேன். ஆனால், படம் வெளியாகி பார்த்த பின்தான் ஏன் இதை தவறவிட்டேன் என வருந்தினேன். இயக்குநருக்குத் தான் அத்தனை கிரெடிட்டுகளும். சாதாரண கதையை அற்புதமான சினிமாவாக மாற்றியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 22 ஜன 2018