வாட்ஸப் வடிவேலு


அரசு பேருந்தில் செல்லும் வசதிமிக்க மணமகன் தேவை...
இதையும் இனி எதிர்ப்பார்க்கலாம்.
அப்படித்தான் ஆகப்போகுது.
அரசுப் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளபோதிலும், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படாது - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல்.
ஆமா, ரொம்ப பரம ஏழைகள்தான் ஆம்னி பஸ்ல போறாங்க. அதனால அதையெல்லாம் ஏத்திடாதீங்க.
இதுல இன்னொரு லாஜிக் பார்த்தோம்னா, நல்லா யோசிச்சு பாருங்க. முடியாத ஆட்கள்தான் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் கார்டு வாங்குறாங்க. ஆனா, 10 ரூபாய்க்கு 7 தான் காசு ஏறும். மத்ததெல்லாம் டாக்ஸ். ஆனா, இதே காசு இருக்குற ஃபுல் டாக்டைம் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்றவங்களுக்கு முழு காசு அப்படியே வரும்.
வாழ்க பாரதம்.
சாதாரண பேருந்து
விரைவு
சொகுசு
நவீன சொகுசு
குளிர்சாதனம்
வோல்வோ
இத்தனை Categoryலயாடா பஸ் வெச்சுருக்கீங்க..?
எங்களுக்குத் தெரிஞ்சு...
உடைஞ்சது
ரொம்ப உடைஞ்சது
மழையில லேசா ஒழுகுறது
மழையில ரொம்ப ஒழுகுறது
வாழ்வோ... சாவோன்னு வந்து சேர்றது...
இவ்வளவுதானடா இருக்குது.
அண்டை மாநிலங்களைவிட குறைவாகத்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் - செல்லூர் ராஜு.
அப்புறம் ஏன் எம்.எல்.ஏக்கள் சம்பளம் மட்டும் அண்டை மாநிலத்தைவிட அதிகமா இருக்கு. எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திட்டு... இப்ப நிதி பற்றாக்குறைன்னு ஏழை மக்களும் நடுத்தர வர்க்கமும் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை ஏத்தறீங்கய்யா... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்.