மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஜனவரி 20) துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 40 ஓவர்களில் 308 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஃபடர் முனிர் அரை சதம் அடித்தார். அதேபோல் ரிஸாட் கான் (48) மற்றும் நிசார் அலி (47) இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர உதவியாக இருந்தனர்.

அதன் பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39 ஓவரில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சுனில் ரமேஷின் 93 ரன்களும், கேப்டன் அஜய் ரெட்டி 63 ரன்களும் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். பார்வையற்றோர் உலகக்கோப்பையில் இந்தியா பெறும் இரண்டாவது கோப்பை இதுவாகும். இதற்கு முன்னதாக இந்தக் கோப்பையை பாகிஸ்தான் அணி இரண்டு முறையும், தென்னாப்பிரிக்க அணி ஒருமுறையும் வென்றுள்ளன.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018