மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

விஜயகாந்த் மேடை மீது கல்வீச்சு!

விஜயகாந்த் மேடை மீது  கல்வீச்சு!

பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விஜயகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போது மேடை நோக்கி செங்கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காற்று மாசு அதிகரிப்பதாகக் கூறிப் பட்டாசுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் சிவகாசியில் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் 25வது நாளாக தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உறுதிமொழியை ஏற்று நேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் சிவகாசி பாவடி தோப்பு திடலில் இன்று (ஜனவரி 21) தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மகளிரணி தலைவர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், "பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தத்தினால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் சீனாவில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும், பேருந்து கட்டண உயர்வு எல்லோரையும் பாதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கேடி ராஜேந்திர பாலாஜி என்று அழைத்த விஜயகாந்த், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா கோடி கோடியாக லஞ்சம் வாங்கித்தான் ஆட்சி நடத்தினார். அவர் வழியில் தற்போது உள்ளவர்களும் லஞ்ச ஆட்சிதான் நடத்துவர் என்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 21 ஜன 2018