பூக்கள் வரலாறு காணாத விலையுயர்வு!


குமரி மாவட்டம் தேவாளை மலர்ச்சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேவாளை மலர்சந்தைக்கு தமிழகத்தின் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை வாங்க வருவது வழக்கம். இங்குள்ள பூக்கள் வெளி நாடுகளுக்கும் , வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. சம்பங்கி, ரோஜா, வாடாமல்லி, உள்ளிட்ட அனைத்துப் பூக்களின் விலையும் இன்று (ஜனவரி 21) ஏற்றத்துடன் காணப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயிலில் மல்லிகைப்பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 6000 வரை விற்பனை ஆகிறது. சங்கரன்கோயில் அருகே உள்ள ராமநாதபுரம், மணலூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மல்லி, பிச்சு, கேந்தி, போன்ற பூக்கள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏற்பட்ட அதிகமான பனிப்பொழிவால் பூக்களின் உற்பத்தி குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் வரத்துக் குறைவாக உள்ளதாகவும், நாளை முகூர்த்த தினம் என்பதாலும் பூக்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது