டிக்கெட் எடுக்கலமா, வேண்டாமா? :அப்டேட் குமாரு

கவர்மெண்ட் பஸ் டிக்கெட்டை நிதிச்சுமை காரணமாக கூட்டிருக்காங்களாம். மக்கள் தான் பஸ் ஓனர்ங்குறதுனால சுமையை ஏத்துக்கச் சொல்லி எடப்பாடி சொல்லிட்டாரு. அப்ப சத்தமில்லாம தனியார் பஸ் டிக்கெட்டை கூட்டுவாங்களே அது எந்த லாஜிக்குல வரும். நம்ம ஆளுங்க புதுசா ஒரு ப்ளான் கண்டுபிடிச்சுருக்காங்க. கோவில்பட்டி போகனும்னா 600ரூபா ஆகுது. டிக்கெட் எடுக்கலைன்னா 500 ரூபாய் வசூலிக்கப்படும்னு எழுதி போட்ருக்காங்க. அதனால டிக்கெட் எடுக்காம ஃபைன்ன கட்டிருவோமான்னு கேட்குறாங்க. கேட்க நல்லா தான் இருக்கு. அதுக்கு மேல இன்னொன்னு எழுதி போட்ருக்காங்களே டிக்கெட் எடுக்காதவங்கள்ட்ட இருந்து பத்து டிக்கெட் காசு வசூலிக்கப்படும்னு. ரிஸ்க் எடுக்கப்போறேன்னு பல்ப் வாங்கிடபோறீங்க பாஸ்..
@manipmp
வழக்கமாய் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவானு விற்பவர் இன்னிக்கு
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் பால்கோவானு விற்கிறார் நவ்
@amuduarattai
நெடுஞ்சாலை பயணங்களில், சிறு ஓய்வெடுக்க கூட மரங்கள் இல்லாததால், நெடுஞ்சாலை உணவங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது.
@aysha_yusuff
நான் பஸ்சுல ஓரு நாளுநாள் தொடர்ந்து ஊருக்கு போக வேண்டியது இருக்கே...
அப்படி போனா ரைடு வந்துடுவாங்கலோ
@ShivaP_Offl
புதியதாக தொடங்கவும்,
ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கும்போது தோல்வியை நினைத்து பெரியதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை..!
@Kozhiyaar
'டிக்கட் விலைய ஏத்திட்டான்னு எங்க முதலாளி கூலியாவா ஏத்தி தந்திட போறார்!?' என்ற விசனத்தை கேட்க கடினமாகத்தான் இருக்கிறது!!!
@Sathik_143
என்ன தம்பி வசதி ஆய்டீங்க போல'!?
பஸ்ல வாரிங்க...!
@indhiratweetz
தப்பு செய்றதுக்கு சாமர்த்தியம் தேவையில்ல, அதை நியாயப்படுத்துறதுக்கு தான் அதிக சாமர்த்தியம் தேவை.
@DhasthanSatham
பஸ் டிக்கெட் விலை ஏத்துனது ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும்
அப்றம் தம்பி
அதுவே பழகிடும்
@withkaran
ஃபோன நோண்டுறதால தூக்கம் வரமாட்டுதா இல்ல தூக்கம் வராததால ஃபோன நோண்டுறோமா?!
@HAJAMYDEENNKS
நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்புன்னு வருடம்தோறும் சொல்றாங்க குடியரசு தினம் சுதந்திர தினத்துக்கு !
@Prabakar Kappikulam
மத்திய பாஜக அரசா..?
மாநில அதிமுக அரசா..?
2018 விலை நிலவரம்
பெட்ரோல் ஒரு லிட்டர் - 74.55 ரூபாய்
டீசல் ஒரு லிட்டர் - 66.03 ரூபாய்
2010 விலை நிலவரம்
பெட்ரோல் ஒரு லிட்டர் – 57.09 ரூபாய்
டீசல் ஒரு லிட்டர் – 37.78 ரூபாய்
குறிப்பு : மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், மாநில அரசின் பஸ் கட்டண உயர்வுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று யாரும் கேட்க கூடாது.
@iam_susi
பேருந்து மக்களுடையது நஷ்டத்தை மக்கள் தான் சரி செய்யவேண்டும்
முதல்வர்_எடப்பாடி.
அப்பறம் என்னத்துக்கு நீங்க முதல்வரு....
@naatupurathan
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் -திமுக!
க்கும்,
அவனவன் ஏகே47, ஏகே75 ரேஞ்சுக்கு அரசியல் பண்ணிட்ருக்கானுங்க,
நீங்க இன்னமும் வேல் கம்பையும், வீச்சருவாளையும் வச்சிக்குனு, வீரவேல், வெற்றிவேல்னு சுத்திக்கிட்டு இருங்க, வெளங்கிடும்
@HAJAMYDEENNKS
நிதிச்சுமையினால அரசு பேருந்து கட்டணம் உயர்கிறது என்றால் தனியார் பேருந்து கட்டணம் உயர்வுக்கு என்ன காரணம் சொல்லுவாங்க ?!
@mufthimohamed1
சென்னைல அடுத்த வாரம் சொந்தகாரருக்கு, கல்யாணமாம் குடும்பத்தோடட வந்துருங்கனு ஃபோன் பண்ணி சொன்னாரு, குடும்பத்தோட வந்தா பஸ் காசு தருவீங்களானு கேட்டேன், பஸ்ல வந்து பத்திரிக்கை குடுக்க பணமில்லாமதான், நான் ஃபோன் பண்ணி சொல்ரேன்னு, சொல்லி ஃபோன கட் பண்ணிட்டாரு.
@Kozhiyaar
நாம் ஒருசிலர் வாழ்க்கையில் சாய்ஸில் விடக்கூடிய கேள்வியாக இருக்கிறோம்!!!
@HAJAMYDEENNKS
இந்தியா ஏழை நாடல்ல..
ஏழைகள் ஏழைகளாவே இருக்கும் நாடு...!
@Ashok_Apk
நஷ்டத்தை தவிர்க்க பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; இதனை மக்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் தங்கமணி
மக்களோட குறைய தீத்து வைக்கதான் அரசு இப்படி உங்க நஷ்டம் கணக்க மக்களோட கஷ்டத்துல திணிக்க இல்ல...
@VKtwitz_Vicky
அதிமுக கொடியில் அண்ணா
படம் இல்லை என்றால்
அண்ணா இருந்தார் என்ற
அடையாளமே இருந்திருக்காது
- அமைச்சர் செல்லூர் ராஜூ
"அண்ணா"ன்னு ஒருத்தர் இல்லைனா அதிமுகவே இருந்துருக்காது விஞ்ஞானி..!
@Prabakar Kappikulam
இரவோடு இரவாக சென்னையில் ஏரியைத் திறந்து விட்டார்கள்
இரவோடு இரவாக ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார்கள்
இரவோடு இரவாக ஜி.எஸ்.டி. வரியைக் கொண்டு வந்தார்கள்
இரவோடு இரவாக முதல்வர் மரணம் என்று அறிவித்தார்கள்
இரவோடு இரவாக புதிய முதல்வர் பதவி ஏற்றார்கள்
இரவோடு இரவாக தியானம் கூட செய்தார்கள்
இப்போது..
இரவோடு இரவாக பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி விட்டார்கள்
இரவோடு இரவாக சுதந்திரம் கிடைத்த நாட்டில் எல்லாமே அப்படி…
வாழ்க_ஜனநாயகம்..!
-லாக் ஆஃப்