மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மாநில சுயாட்சிக்கு எதிரானது அல்ல!

மாநில சுயாட்சிக்கு எதிரானது அல்ல!

ஆளுநர் ஆய்வு செய்வது மாநில சுயாட்சிக்கு எதிரானது அல்ல என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று (ஜனவரி 21) தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தி வருகின்றார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆளுநர் ஆய்வு செய்வது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாகவும், மத்திய பாஜக அரசு ஆளுநர் மூலமாக தமிழகத்தை பின்னிருந்து இயக்க முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 21) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கக்கன்ஜி புரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அவருடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உடனிருந்தார். இந்நிலையில்,ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

ஆளுநரின் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன்,ஆளுநர் ஆய்வு செய்வதை எதிர்கட்சிகள் குற்றம் சொல்லலாம்.ஆனால், ஆளுநர் ஆய்வு செய்வது மாநில சுயாட்சிக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018