மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மூளைச்சாவு: உடலுறுப்பு 5 பேருக்குப் பொருத்தம்!

மூளைச்சாவு: உடலுறுப்பு 5 பேருக்குப் பொருத்தம்!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்குப் பொருத்தப்பட்டன.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). கடந்த 16ஆம் தேதி மாலை மதகடிப்பட்டு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் இவர் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் சுரேஷ் மூளைச்சாவு அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுரேசின் உடல் உறுப்புகளைத் தானமாக கொடுப்பதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சுரேஷின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகம், 2 கண்கள் போன்ற உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஜிப்மர் மருத்துவக் குழுவினர் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தனர்.

தானமாகப் பெறப்பட்ட சுரேசின் உறுப்புகள் 5 பேருக்குப் பொருத்தப்பட்டன. அவரது உறுப்புகளைப் பெற்ற 5 நோயாளிகளும் தற்போது நலமுடன் இருந்து வருகின்றனர். இதற்காக சுரேஷ் குடும்பத்தினரை அழைத்து ஜிப்மர் இயக்குனர் மருத்துவர் சுபாஷ் சந்திர பரிஜா பாராட்டினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018