மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

உலகின் பாராட்டத்தக்க நிறுவனம் ஆப்பிள்!

உலகின் பாராட்டத்தக்க நிறுவனம் ஆப்பிள்!

உலகின் மிகவும் பாராட்டத்தக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாக ஃபார்ட்ச்யூன் நிறுவனத்தின் ஆய்வறிக்கைக் கூறுகிறது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”உலகின் பாராட்டத்தக்க நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து 11ஆவது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஆல்பபெட் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருந்தது.

பெர்க்சைர் ஹாத்வே, ஸ்டார்பக்ஸ் கார்பரேசன், வால்ட் டிஸ்னி, மைக்ரோசாஃப்ட் கார்பரேசன், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், பெட்எக்ஸ் கார்பரேசன், ஜே.பி.மோர்கன் சேஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. மைக்ரோசாஃப்ட் மற்றும் ஜே.பி. மோர்கன் ஆகிய நிறுவனங்கள் இப்பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெறவில்லை. மற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில் ஒரு இடம் முன்பின் தள்ளப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018