மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சூர்யா 36: காம்போ கூட்டணி!

சூர்யா 36: காம்போ கூட்டணி!

சூர்யா-செல்வராகவன் கூட்டணி முதன்முறையாக இணைந்திருக்கும் படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் சூர்யா-செல்வராகவன் கூட்டணியில் தற்போது யுவன் ஷங்கர் ராஜா இணைந்திருக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவும் செல்வராகவனும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 36ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 21 ஜன 2018