மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

இசையமைப்பாளராகும் அந்தோணி தாசன்

இசையமைப்பாளராகும் அந்தோணி தாசன்

கரகாட்ட கலைஞன், நாட்டுப்புற பாடகர், திரைப்பட பாடகர் என தனது திறமைகளை வெளிப்படுத்திவரும் அந்தோணி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

பாபி சிம்ஹா நடிப்பில் அறிமுக இயக்குநர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள படம் வல்லவனுக்கு வல்லவன். இந்த படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் விஜய் தேசிங்கு தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். பைரி என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெய்வீர் சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தண்ணியில கண்டம் படத்தில் நடித்து கவனம் பெற்ற நேஹா கதாநாயகியாக நடிக்கிறார்.

அப்புகுட்டி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் கவனிக்கப்பட்ட பழனி, ‘அறந்தாங்கி’ நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஷ்ணகிரி வட்டார கிராமங்களின் பின்னணியில் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது.

படம் பற்றி டெக்கான் க்ரோனிக்கலுக்கு அளித்த பேட்டியில் பேசிய விஜய், “துரோகத்தை மன்னிப்பதும் குற்றமே என்ற உள்ளடக்கத்தை படம் கொண்டுள்ளது. படத்தை பார்க்கும் போது இந்த உள்ளடக்கத்திற்கான பொருள் புரியும். சமூக கருத்துகளை வலியுறுத்தும் படமாக இது இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 21 ஜன 2018