மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

காலிறுதிக்குள் நுழைந்த முன்னணி வீரர்கள்!

காலிறுதிக்குள் நுழைந்த முன்னணி வீரர்கள்!

ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால், 4ஆம் நிலை வீரரான மரின் சிலிச் மற்றும் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இன்று (ஜனவரி 21) நடைபெற்ற 4 ஆவது சுற்று ஆட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். அந்த போட்டிகள் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, மக்டலினா ரைபரிகோவா உடன் மோதினார். இதில் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை கர்லா சுராசுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ரபேல் நடால் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன் உடன் மோதினார். அதில் முதல் செட்டினை 6-3 என எளிதில் நடால் கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது சுற்றில் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேன் சிறப்பாக விளையாடி நடாலை 7-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நடால் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்துள்ள நடால், காலிறுதி போட்டியில் மரின் சிலிச் உடன் மோத உள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 21 ஜன 2018