மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

விவசாயிகளுக்காக ‘தலைவணங்காதே தமிழா’!

விவசாயிகளுக்காக ‘தலைவணங்காதே தமிழா’!

விவசாயத்தையும், விவசாயிகளையும் கொண்டாடுவதற்காக உருவான ‘தலைவணங்காதே தமிழா’ என்கிற பாடலை சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண்விஜய் நாயகனாக நடிக்கும் ‘தடம்’ படத்தின் இசையமைப்பாளர்அருண்ராஜ், விவசாயத்தையும், விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதத்தில் ‘தலைவணங்காதே தமிழா’ என்கிற பெயரில் ஒரு உணர்ச்சிகரமான பாடலை உருவாக்கியுள்ளார். இதை நடிகர் சமுத்திரக்கனி வெளியிட, நடிகர் அருண்விஜய், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இப்பாடல் உருவானதைப் பற்றி இசையமைப்பாளர் அருண்ராஜ் கூறுகையில், “நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டபோது தான் போராட்டத்தின் நிலையும், விவசாயிகளின் பக்கம் உள்ள உண்மையும் இந்தப் பாடலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தது. இந்தப்பாடல் தந்தை மகனைப் பற்றிய அழகிய வாழ்வியல் கதை தொகுப்பு, அவர்களின் தினசரி வாழ்க்கையும் அதில் அவர்கள் சந்திக்கும் கடன் சுமைகளும் மற்றும் பல பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்கு கொண்டு செல்கிறது, பாடலின் முடிவில் நம்பிக்கை தரும்படியான காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடல் நம்நாட்டின் விவசாயிகளின் பிரச்சினைகளை பேசும்படியாக எடுக்கப்பட்டுள்ளது”என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018